News

News

தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் கொடி நாள் நிகழ்ச்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொடிநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.   நமது இந்திய நாட்டின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொடிநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்து நம் நாட்டின் முப்படைகளின் பணிகள் குறித்து பேசினார். பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்றுப் பேசினார். கொடிநாளை விளக்கும் வகையில் முப்படைகளின் சாதனைகள், நமது முப்படை வீரர்களின் தியாகங்கள் பற்றி மாணவ, மாணவிகள் பேசினர். உலக நாடுகளின் தேசிய கொடிகள் குறித்தும், நம் நாட்டின் முப்படை வீரர்களுக்கு உதவி செய்வது குறித்தும் விளக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் நன்றி கூறினார்.

<< Go back to the previous page