தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரிஸ்ஷேசன், ரோஸ் ஆகியோர் வரவேற்றுப் பேசினர். விழாவில் தென்காசி சக்திநகர் சியோன் ஆலயத்தந்தை அருள்ராஜ், அவரது மனைவி ஜெபா அருள்ராஜ் மற்றும் சியோன் சர்ச் சுஜின் ஆகியோர் கிறிஸ்துமஸ் சிறப்புரையாற்றினர். மாணவ, மாணவிகள் கிறிஸ்து பிறப்பு பற்றிய நாடகம் நடத்தினர். கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிகளை மாணவி ஜனனி தொகுத்து வழங்கினார். அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. முடிவில் மாணவி சாலினி நன்றி கூறினார்.