பண்பொழியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பாடல் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றது. பண்பொழி புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புனித ஜோசப் டேலன்ட் அகாடமி சார்பில் கிறிஸ்துமஸ் பாடல் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜெரொம்சிங் ஸ்டீபன் ராஜ், ஜெரிகெல்வின் ராஜ், டொம்னிக்சாம், விஜயபாஸ்கர், டேனில்ஜெபராஜ், கில்பர்ட் இம்மானுவேல், ஜெப்ரி கெல்வின் ராஜா, ஆலன்பவுலிஸ், பொன் ஜெயந்தன், மாணவிகள் சித்திகா, ஜெனிபர் செல்வராணி, இவிலின் ஜெசிகா, அனிதா, ஆசிரியர் ஜீவரத்தினம் ஆகியோர் கொண்ட குழுவினர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பரிசு கோப்பை மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.