தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலர் பழங்கள் தின விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கே.ஜி.மாணவ, மாணவிகளுக்கு உலர் பழங்களின் பயன்களை விளக்கும் வகையில் உலர் பழங்கள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவி ஜென்ஸி வரவேற்றுப் பேசினார். உலர் பழங்களின் பயன்கள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் உலர் பழங்கள் பற்றி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவர்கள் டொம்னிக்தர்சன், இசாக்டேனில் ஆகியோர் பேசினர்.உலர் பழங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். முடிவில் மாணவர் சஞ்சைவேல் நன்றி கூறினார்.