தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாகன ஓட்டுநர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளியில் பள்ளி வாகன ஓட்டுநர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓட்டுநர் வரவேற்றுப் பேசினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஓட்டுநர் தங்கம் தனது அனு பவங்களைப் பற்றி பேசினர். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பங்கேற்ற நடனம், ஓரங்க நாடகம், பாட்டு, பட்டிமன்றம், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய மேலாளர் குருசாமி பட்டிமன்ற நடுவராக செயல்பட்டார். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் திருமலை பரிசு வழங்கினார். முடிவில் ஓட்டுநர் லெட்சுமணன்; நன்றி கூறினார்.