கோடகநல்லூரில் நடைபெற்ற கரம் யோகத்தான் மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார். நெல்லை அருகே கோடகநல்லூரில் கரம் யோகத்தான் மாரத்தான் போட்டி நடைபெற்றது. யோக் டிரஸ் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார். இவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசினை சேரன்மகாதேவி சப்.கலெக்டர் ஆகஸ் வழங்கி பாராட்டினார்.வெற்றி பெற்ற மாணவரை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.