தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கலப்பு தானிய உணவு தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கே.ஜி.வகுப்பு மாணவ, மாணவிகள் தானியங்களின் பயன்களை அறிந்து கொள்ளும் வகையில் கலப்பு தானிய உணவு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கி தானிய உணவுகளின் பயன்களைப் பற்றி விளக்கினார். பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சுபலெட்சுமி வரவேற்றுப் பேசினார். அனைத்து வகையான தானியங்களில் செய்யப்பட்ட பல்வேறு உணவு வகைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர். கண்காட்சியில் வைக்கப்பட்ட தானிய உணவுகள் பற்றி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் கலப்பு தானிய உணவு வகைகள் என்ற தலைப்பில் பேசினர். முடிவில் மாணவர் பிரவீன் நன்றி கூறினார்.