தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி நதிராபாத்திமா வரவேற்றுப் பேசினார்.சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அஜ்மல் அசோசியேட் பாலசெந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவிகள் சரபினா, சௌமியா ஆகியோர் இந்திய குடியரசு என்ற தலைப்பில் பேசினர். மாணவி சுபசினி குடியரசு தின கவிதை வாசித்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவிகள் ஜெரிஷ் ஜெரோன்ரோஸ், நபிசாத்துல் ஷஜிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவர் அஜய்குமார் நன்றி கூறினார்.