தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாநில தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றுபட்ட இந்தியாவின் திறமையான தடகள வீரர்களுக்கான கோடை ஒலிம்பிக் 2020-2024 போட்டிக்கு வெற்றியை நோக்கிய பயணம் என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட அளவிலான தேர்வு போட்டி பாளையங்கோ ட்டை அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் 100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்ட போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிவபிரகாசம், முகம்மது மீரான், ஜோதிபாலன், பாரத், நவீன் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் சிவபிரகாசம், முகம்மது மீரான் ஆகிய இருவரும் 200 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமை யாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.