மாவட்ட அளவிலான மேஜைபந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான மேஜைபந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிவப்பிரகாசம், அன்டன் ஜெலஸ்டீன் ஆகியோர் இளையோர் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றனர். மேலும் இளையோர் ஒற்றையர் பிரிவில் இப்பள்ளி மாணவர் சிவப்பிரகாசம் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.