News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் வெள்ளரிக்காய் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளரிக்காய் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளரிக்காய் பயன்களை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளரிக்காய் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்து வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி பேசினார். பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி பிரதிக்ஷா வரவேற்றுப் பேசினார்.  தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் வெள்ளரிக்காய் மருத்துவ குணங்கள் பற்றி பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் வெள்ளரிக்காய் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை திரளான மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர். மாணவி லயோலாலவ்லின் லிசா நன்றி கூறினார்.

<< Go back to the previous page