News

News

சிந்தனைநாள் பேரணி : சாரண, சாரணியர் பங்கேற்பு

தென்காசியில் சாரண சாரணிய இயக்கம் சார்பில் சிந்தனை நாள் பேரணி நடைபெற்றது. பாரத சாரண சாரணிய இயக்கத் தந்தை பேடன் பவலாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசியில் சாரண, சாரணீயர்கள் கலந்து கொண்ட சிந்தனை நாள் பேரணி நடைபெற்றது. ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பேரணி தொடங்கியது. மாவட்ட முதன்மை ஆணையரும் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலருமான ரதிபாய் தலைமை தாங்கினார். குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் திருமலை, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மேலகரம் சீனிவாசன், தென்காசி செந்தூர்பாண்டி, ராமர், சாஸ்திரி, வைகை ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகி வைகைகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேரணியை தென்காசி டி.எஸ்.பி.,மணிகண்டன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், டிராபிக் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பாரத ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மது ஒழிப்பு, போதைப்பொருட்களை தவிர்த்தல், செயற்கை உணவுகளை தவிர்த்தல், சாலை போக்குவரத்து விதிமுறைகளை மதித்தல் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சாரண, சாரணீயர்கள் கைகளில் ஏந்திச் சென்றனர்.பேரணியில் தென்காசி கல்வி மாவட்ட அரசு மேல்நிலை, உயர்நிலை, மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகளைச் சேர்ந்த சாரண, சாரணீயர்கள், சாரண ஆசிரியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.  பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்றது.ஏற்பாடுகளை சாரண, சாரணிய இயக்க மாவட்டச் செயலாளர் நேருராஜா, மாவட்ட ஆணையர்கள் இவாஞ்சலின் டேவிட், திவான் பக்கீர், மாவட்ட அமைப்பு ஆணையர்கள் சுரேஷ்குமார், பொன்னம்மாள், மாவட்ட பயிற்சி ஆணையர்கள் தெட்சி ணாமூர்த்தி, தெரஸ் விஜயராணி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பரமேஷ்வரன் நன்றி கூறினார்.

<< Go back to the previous page