தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்ட தேசிய அறிவியல் தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீநிதி வரவேற்றுப் பேசினார்.தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவிகள் தேன்மொழி, பேச்சியம்மாள்தேவி, புவனேஸ்வரி, பூஜா, மாணவர்கள் ராஜேஷ்குமார், ராகுல், பிரதீப், பிரிசாகமல், சுரேஷ் ஆகியோர் அறிவியலில் சாதனை படைத்த விஞ்ஞானிகள் மற்றும் அவர்கள் கண்டு பிடிப்புகள் பற்றி பேசினர். அறிவியல் மாதிரிகள் பற்றி மாணவிகள் அஷ்விகா, கல்பனாதேவி ஆகியோர் விளக்கினர். சாலை, நீர்நிலை, இருப்புபாதை, வான்வழி உள்ளிட்ட போக்குவரத்துக்கள், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறுவது, அலைபேசி அதிர்வலைகளால் பாதிப்பு, இன்டர்நெட் இணைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு ஏற்படும் உடல்நிலை மாற்றம். தூக்கம் இன்மை குறித்த மாதிரிகள் உருவா க்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பற்றி மாணவ, மாணவிகள் விளக்கம் அளித்தனர்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் மாணவி சரண்யா நன்றி கூறினார்.