தென்காசியில் நடைபெற்ற டேக்வாண்டோ, பேட்மின்டன் போட்டிகளில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றனர். தென்காசி பிஎஸ்எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் டேக்வாண்டோ மற்றும் பேட்மின்டன் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தென்காசி வட்டாரப்ப குதியைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ரிச்சர்ட் மெர்வின், பிரனாவ் அஜய் ஆகியோர் தங்கப்பதக்கமும், மாணவி ரியனாமெர்வின் 3 தங்கப்பதக்கமும், மாணவர் அஸ்வின் குமார் வெள்ளிப் பதக்கமும், மாணவர் அச்சுதானந்தன் வெண்கலப் பகத்கமும் பெற்றனர். மேலும் பேட்மின்டன் போட்டியில் ரிச்சர்ட் மெரிவின், ரியனாமெர்வின் ஆகியோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். இவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.பதக்கங்கள் பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.