தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கி தண்ணீரின் அவசியத்தையும், அதனை சேமிக்க நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்றுப் பேசினார். தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த ஓவியப் போட்டி நடைபெற்றது. ஓவியப் போட்டியில் தீட்டப்பட்ட ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. உலக தண்ணீர் தின உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், உயிரிகள் உயிர்வாழ தண்ணீரின் அவசிம் பற்றியும் மாணவ, மாணவிகள் பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் உதவி தலைமை யாசிரியை சுப்பம்மாள் நன்றி கூறினார்.