தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சிவதனுஷிகா வரவேற்றுப் பேசினார்.சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து தலைமை யாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் பேசினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் பற்றி பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவர் ஸ்டெர்லைன் புஷ்பராஜ், மாணவி காயத்ரி ஆகியோர் தொகுத்து வழங்கினர். மாணவர் விகாஷ் நன்றி கூறினார்.