News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் கொய்யாப்பழ தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொய்யாப்பழ தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கே.ஜி., வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கொய்யாப்பழத்தினை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் கொய்யாப்பழ தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி மகாலெட்சுமி வரவேற்றுப் பேசினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவர் லிங்கேஷ், முத்துராம், மாணவி பிரதிக்ஷா  ஆகியோர் கொய்யாப்பழத்தின் பயன்கள் மற்றும் அதன் மருத்துவக்குணங்கள் பற்றி பேசினர். கொய்யாப்பழ கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் மாணவர் ஜெரிக்சன் நன்றி கூறினார்.

<< Go back to the previous page