தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தந்தையர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக அப்பா தின விழாற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அசிம்முஸ்தபா வரவேற்றுப் பேசினார்.தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவர்கள் ஹரிவேல்சுதன், குகனேஷ், முகேஷ்கிருஷ்ணன், மாணவிகள் அப்ரின் மீராள், செல்வதரணி, அசுனாநர்ககீஸ், முத்துலாவன்யா, மகாலெட்சுமி, சுபிஷா ஆகியோர் தந்தையர் சிறப்பு பற்றியும், உலக தந்தையர் தினம் பற்றியும் பேசினர்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவர் அருண்மகேஷ் மாணவி சௌமியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி மகாலெட்சுமி நன்றி கூறினார்.