தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் சர்வதேச பிளாஸ்டிக் தடை தின விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சார்பில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் சர்வதேச பிளாஸ்டிக் தடை தின விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதன்மை முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் அன்பரசி திருமலை, ஒருங்கிணைப்பாளர் குழந்தை தெரசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ஆதினி விவேகஸ்ரீ வரவேற்றுப் பேசினார். மாணவர் ஐசக் டேனியல் ஹிந்தியிலும், மாணவர் டொம்னிக்டெரிசன் ஆங்கிலத்திலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி பேசினர். மாணவர் அகன்ஸ்லின் வினாடி, வினா நிகழ்ச்சி நடத்தினார். மாணவர்கள் கபிலன், சக்கரியா, அச்சுதானந்தன், அர்னேஷ், விகாஷ், அப்துல்லா ஆகியோர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கவர்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் பார்த்தனர். பாலிதீன் கவர்கள் பயன்படுத்த மாட்டோம்!, சுற்றுச்சூழலை பாதுகாப்போம்! என மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவி சுபஸ்ரீ நன்றி கூறினார்.