தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில மன்றம் சார்பாக நடைபெற்ற உலக மக்கள் தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமைதாங்கினார். பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவித் தலைமை ஆசிரியர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி அஸ்விகா வரவேற்று பேசினார். மாணவ, மாணவிகளின் மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு நாடகம், மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த மௌனமொழி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவி திவ்யா உலக மக்கள் தொகை பற்றி பேசினார்.நிகழ்ச்சிகளை மாணவர் ராகுல், மாணவி சுபிக்ஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி முகமது மீரான் ஷமி நன்றி கூறினார்.