தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜூலை மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் இளையோர் பிரிவு 800 மீ ஓட்டத்தில் முதலிடமும், மாணவர் வெங்கடேஷ்குமார் உயரம் தாண்டுதலில் முதலிடமும், தொடர் ஓட்டத்தில் இப்பள்ளி மாணவர்கள் முதலிடமும், இப்பள்ளி மாணவர் முகமது மீரான் 100 மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவி சுருதிகா குண்டு எறிதலில் இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.