தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மரவள்ளிக் கிழங்கு தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கே.ஜி., மாணவ, மாணவிகள் மரவள்ளிக் கிழங்கு பற்றி அறிந்து கொள்ளும் வகையில் மரவள்ளிக் கிழங்கு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கி மரவள்ளிக் கிழங்கின் பயன்கள் பற்றி பேசினார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் மிதுன் வரவேற்றுப் பேசினார். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், மாணவர்கள் லிங்கேஸ் முத்துராம், ராகுல் ஆகியோர் மரவள்ளிக் கிழங்கின் மருத்துவ குணங்கள் மற்றும் ஊட்டச்சத்து பயன் குறித்து பேசினர். மாணவிகள் ஜான்ஸி, தேவி, மினர்வனா ஆகியோர் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி குறித்து பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் மாணவி கவுசிகா நன்றி கூறினார்.