மாநில அளவிலான தடகளப்போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நெல்லை மாவட்ட அளவிலான ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 14 வயதிற்குட்பட்ட வர்களுக்கான உயரம் தாண்டுதலில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெங்கடேஷ்குமார் முதலிடம் பெற்றார். மேலும் இப்பள்ளி மாணவி ஸ்ருதிகா இரண்டாமிடமும், 100 மீட்டர் ஓட்டத்தில் இப்பள்ளி மாணவர் முகம்மது மீரான் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்கள் மாநில அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.