தென்காசி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மாணவர் ஜூனியர் பிரிவில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகமது மீரான் 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம்தாண்டுதல் ஆகியவற்றில் முதலிடம் பெற்றார். இப்பள்ளி மாணவர் வெங்கடேஷ்குமார் உயரம் தாண்டுதலில் முதலிடமும், 100மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர் பாரத் 600 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், 400 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர்கள் நவீன் வேலாயுதம், வெங்கடேஷ்குமார், பாரத், முகமது மீரான் ஆகியோர் தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர். சீனியர் பிரிவில் மாணவர் நவீன் 3000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், லியான் 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவாக்ள் லியான், அழகுசூர்யா, சிவபிரகாசம், சிவசுப்பிரமணியன் ஆகியோர் தொடர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்றனர். சூப்பர் சீனியர் பிரிவில் மாணவர் வேணுகோபால் குண்டு எறிதலில் முதலிடமும், சபரி பாலசுந்தர் 1500 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், அரவிந்த் சங்கர் 5000 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மீரான்மைதீன் 800 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவர்கள் முகமது சவீஸ், சீனிவாசன், முத்துக்கிருஷ்ணன், நிர்மல் ஆகியோர் 4க்கு100 தொடர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், மாணவர்கள் மீரான் மைதீன், ரூபன், ராகுல், வேணுகோபால் ஆகியோர் 4க்கு400 தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர். மாணவிகள் ஜூனியர் பிரிவில் இப்பள்ளி மாணவிகள் முத்துலெட்சுமி, அருதிகா ஆகியோர் தட்டு எறிதலில் இரண்டாமிடமும், சூப்பர் சீனியர் பிரிவில் அபிஷ் 100 மீட்டர் ஓட்டம் மற்றும் மும்முறை தாண்டுதலில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடமும், மாணவி ராஜேஸ்வரி உயரம் மாண்டுதலில் மூன்றாமிடமும் பெற்றனர். ஜூனியர் பிரிவில் மாணவர் முகமது மீரான் தனிநபர் சாம்பியன் பட்டமும், சூப்பர் சீனியர் பிரிவில் மாணவி அபிஷ் தனிநபர் சாம்பியன் பட்டமும் பெற்றனர். இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர்களை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஷாஜகான் பாராட்டினார். மேலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, பால்மதி, இசத்தித்துரை, வெங்கடேஷ், ஆகியோரையும் ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.