பாவூர்சத்திரத்தில் நடந்த கல்வி மாவட்ட 100 மீ ஓட்டத்தில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார். தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. தென்காசி கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டி பாவூர்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இப்போட்டியில் தென்காசி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவிற்கான 100 மீ ஓட்டத்தில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகம்மது மீரான் வெற்றி பெற்றார். இவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற மாணவரை தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் சுடலை, ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.