கடையநல்லூரில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது. நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு யோகா பெடரேசன், நெல்லை மாவட்ட யோகா விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் 28வது ஆண்டு மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. போட்டிக்கு தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி திரிவேணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு யோகா பெடரேசன் பொதுச்செயலாளர் ராஜமகேந்திரன் முன்னிலை வகித்தார். பெடரேசன் தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். பொதுச்செயலாளர் கிராண்ட்மாஸ்டர் அரவிந்த் போட்டிகளை துவக்கி வைத்தார். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 952 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முத்துராம், விகாஷ், முகிலன், மாணவிகள் விஷாலி, பவதாரணி, அருணநாயகி ஆகியோர் முதலிடம் பெற்றனர். மேலும் இப்பள்ளி மாணவர் சிவா, மாணவிகள் மகாசக்தி, அஸ்வதி, ஹேமாஹரிதஸ்ரீ, முகஸ்ரீ ஆகியோர் இரண்டாமிடமும், ராகவி, கிருஷ்ணபிரியா, ஹவிஸ் ஆகியோர் மூன்றாமிடமும், பிரதீபா, இலக்கியஸ்ரீ ஆகியோர் நான்காமிடமும் பெற்றனர். மேலும் இப்பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.