News

News

தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளி ஆண்டு விழா : ஓய்வு பெற்ற நீதிபதி பங்கேற்பு

மாணவர்கள் படித்து முடித்ததும் நாட்டிற்கு உழைக்க முன் வர வேண்டும் என தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் ஓய்வுபெற்ற நீதியரசர் பாஸ்கரன் பேசினார். தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசரும், தமிழக நீதித்துறை அதிகாரிகளின் சங்க முன்னாள் தலைவருமான பாஸ்கரன் தலைமை தாங்கினார்.  ஓய்வு பெற்ற நீதிமன்ற பதிவாளர் நீதிபதி உதயன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் மீனாட்சிசுந்தரம், பாண்டுரங்கன், ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் வெஸ்லிதாமஸ் ஜோ வரவேற்றுப் பேசினார். சக்திநகர் சியோன் ஆலய போதகர் அருள்ராஜ் சிறப்பு பிராத்தனை செய்தார். மாணவிகள் முத்துலெட்சுமி, ஜெகோசேகா ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். 

பள்ளி மாணவ பேண்ட் வாத்தியக்குழுவினரின் வரவேற்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட நீதியரசர் பாஸ்கரன் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:மாணவ, மாணவிகள் கடுமையாக உழைத்திட வேண்டும். பக்தி கொள்ள வேண்டும். ஒழுக்கம் உடையவர்களாக திகழ வேண்டும். படிப்பை முடித்து விட்டு நாட்டிற்கு உழைக்க முன்வரவேண்டும். படித்த பள்ளியை மறந்து விடக்கூடாது.  கல்வியிலும், விளையாட்டிலும்  திறமைளை வெளிப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களின் எண்ணங்களை குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது. குழந்தைகளிடம் என்ன திறமைகள் மறைந்திருக்கிறது என்பதை கண்டறித்து அத்திறமைகளை வெளிப்படுத்த உதவிட வேண்டும். ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்து கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதியரசர் பாஸ்கரன் பேசினார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு சிறப்பு வழக்கறிஞர் அருள்வடிவேல் (எ) சேகர், சட்டப்பேராசிரியர் டாக்டர் முகமது, நர்சரி பள்ளிகள் சங்க நிர்வாகி பாலசுப்பிரமணியன், பேராசிரியை டாக்டர் அனார்கலி, வழக்கறிஞர்கள் பாலசெந்தில்குமார், இராமசாமி மற்றும் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவிகள் முத்துலெட்சுமி, ஜெகோசேகா ஆகியோர் பள்ளி வரலாறு என்ற தலைப்பில் பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிகளை மாணவர் வெஸ்லிதாமஸ்ஜோ, மாணவி மகேஸ்வரி ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் பெற்றோர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் திருமலை மற்றும் மாணவர் ஆரீஸ் ஆகியோர் நன்றி கூறினர். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆண்டு விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

<< Go back to the previous page