கரம் யோகத்தான் மாரத்தான் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் வெற்றி பெற்றார். நெல்லை கோடகநல்லூரில் கரம் யோகத்தான் மாரத்தான் போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கான 5 கி.மீ., மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் இரண்டாமிடம் பெற்றார். அவருக்கு வெள்ளிப் பதக்கமும், ரூ.2 ஆயிரம் ரொக்கமும் பரிசாக நெல்லை மாவட்ட கலெக்டர்ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கி பாராட்டினார். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் பாரத்தை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.