தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு சிபிஎஸ்இ பள்ளியில் உலக வாழ்வியல் தின விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக வாழ்வியல் தின விழாவிற்கு பள்ளி முதன்மை முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். ஆக்ஸ்போர்டு பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். மாணவி ஜெசிகா வரவேற்றுப் பேசினார். மாணவர் முகமது யுனுஸ், மாணவி பிரதக்ஷனா ஆகியோர் உலக வாழ்வியல் தினம் பற்றி பேசினர். நடனம், பாட்டு, கவிதை, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, துணுக்குப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உலக வாழ்வியல் தினம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் மாணவி மாதுரி நன்றி கூறினார்.