தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி சரபினா வரவேற்று பேசினார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுல்தான் பாஷா தேசிய கொடியேற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அஜ்மல் அசோசியேட்ஸ் வழக்கறிஞர் பாலசெந்தில்குமார் குடியரசு தின உரையாற்றினார். மாணவர் வெஸ்லி தாமல் ஜோ, மாணவி நித்ய கல்யாணி ஆகியோர் குடியரசு தினம் என்ற தலைப்பில் பேசினர். மாணவர் ஹரிபிரகாஷ் கவிதை வாசித்தார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியைகளுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. முடிவில் மாணவி லதிபாஇஷானா நன்றி கூறினார்.