தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் பெருங்கடல் தின விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை வளர்க்கும் வகையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெருங்கடல் தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி கவுரவ முதல்வர் திருமலை தலைமை தாங்கி நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர் அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். பள்ளி மாணவி அப்ரா வரவேற்றுப் பேசினார். மாணவி அக்சயா உலக பெருங்கடல் தின உறுதிமொழியை வாசிக்க அதனை மற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவி காவியா உலக பெருங்கடல் என்ற தலைப்பில் பேசினார். மாணவ, மாணவிகள் கடல் உயிரினங்கள் போன்று வேடமணிந்து நடனம் ஆடினர். மேலும் பெருங்கடலின் சிறப்புகளை விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெருங்கடலில் வாழும் உயிரினங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர். முடிவில் மாணவி பாவனா நன்றி கூறினார்.