தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தின விழாவிற்கு பள்ளி சீனியர் முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் ஜெரிக்சன் வரவேற்று பேசினார். யோகாவின் சிறப்புகள் மற்றும் பயன்கள் குறித்து ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பேசினர். மாணவ, மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். யோகா பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. விழாவில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் சஞ்சய்வேல் நன்றி கூறினார்.