தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் நடைபெற்ற மருத்துவர் தின விழாவிற்கு பள்ளி சீனியர் முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். மாணவர் ஸ்ரீநந்தா வரவேற்று பேசினார். மாணவி அகல்யா, மாணவர் குருசரன் ஆகியோர் மருத்துவர் பணி குறித்து ஹிந்தியில் உரையாற்றினர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் எவ்வாறு மருத்துவ சேவை செய்கின்றனர் என்பது குறித்து மாணவர்கள் மைம் மூலம் நடித்துக் காட்டினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ சேவை குறித்த கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை திரளான மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர். இறுதியில் மாணவி சஞ்சனி நன்றி கூறினார்.