News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்ததது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பாதுகாப்பு, உலக பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார் தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசியரியை குழந்தை தெரசா வரவேற்றுப் பேசினார். உலக மக்களின் பாதுகாப்பு, இந்திய தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து மாணவ, மாணவிகள் பேசினர்.  மேலும் ராணுவ சீருடை, காவல்துறை சீருடை அணிந்து மாணவ, மாணவிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தியா உலக வல்லரசாக திகழ ஒவ்வொரு இந்தியனும் பாடுபடுவோம் என்ற உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் வீர, தீர செயல்கள் புரிந்த நமது இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினரின் சிறப்புகள் பற்றி விளக்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் நன்றி கூறினார்.

<< Go back to the previous page