தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் உலக உயிரினங்கள் தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் கொண்டாடப்பட்ட உலக உயிரினங்கள் தின விழாவிற்கு பள்ளி சீனியர் முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். செயலாளர் அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். மாணவி அப்ரா வரவேற்று பேசினார்.விலங்குகளால் மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்கள் பற்றி மாணவ, மாணவிகள் விளக்கினர். மேலும் மாணவ, மாணவிகள் பல்வேறு விலங்குகள் போன்று மாறு வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் நடத்தினர். பல்வேறு உயிரினங்கள் வாழ்க்கை சூழல் குறித்த கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை திரளான மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர். முடிவில் மாணவர் அச்சுதானந்தன் நன்றி கூறினார்.