News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் கொண்டாடப்பட்ட முன்னாள்முதல்வர் காமராஜரின் 117வது பிறந்த தின விழாவிற்கு பள்ளி சீனியர் முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். தாளாளரும் செயலாளருமான அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார். அலங்கரிக்கப்பட்ட காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  மாணவர்கள் காமராஜர் வேடம் அணிந்து அவரின் பல்வேறு சாதனைகளை எடுத்துக் கூறினர். கிங் மேக்கர் காமராஜர், கர்மவீரர் காமராஜர், தென்னாட்டு காந்தி காமராஜர், படிக்காத மேதை காமராஜர், கல்வி கண் திறந்த காமராஜர், மதிய உணவு அளித்த காமராஜர், அணைக்கட்டுகள் தந்த காமராஜர், பெருந்தலைவர் காமராஜர், தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த காமராஜர்; உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது.  இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி சீனியர் முதல்வர் திருமலை பரிசுகள் வழங்கினார்.காமராஜர் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டு புகைப்படங்களுக்கான விளக்கங்களை கேட்டறிந்தனர். நிகழ்ச்சிகளை மாணவர் அபிஷேக் ஜோயல், மாணவி மதுபாலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இறுதியில் மாணவி நித்யகல்யாணி நன்றி கூறினார்.

<< Go back to the previous page