News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் கார்க்கில் வெற்றி தினம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் கார்க்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் ஆங்கில மன்றம் சார்பில் நடைபெற்ற கார்க்கில் வெற்றி தின விழாவிற்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழுமங்களின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். மாணவி சுபிக்ஷா வரவேற்றுப் பேசினார்.  தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் மற்றும் மாணவ, மாணவிகள் கார்க்கில் போரில் இந்தியயா வெற்றி பெற்றது குறித்து பேசினர். கார்க்கில் வெற்றி குறித்த நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை மாணவ, மாணவிகள் நடத்தினர். கார்க்கில் போர் வெற்றி குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. நிகழ்க்சிகளை மாணவி சக்தி துளசி தொகுத்து வழங்கினார். முடிவில் லெட்சுமி நன்றி கூறினார்.

<< Go back to the previous page