தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மன்ற விழா நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ் மன்ற விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி நித்ய கல்யாணி வரவேற்று பேசினார்.வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து மாணவ, மாணவிகள் பேசினர். கவிதை, பாடல்கள், இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புலவர் காக்கைப்பாடினியார் பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளை மாணவி மாரியம்மாள் தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவி அஜிஸா நன்றி கூறினார்.