News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் சுதந்திர தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் சுந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சார்பில் நடைபெற்ற 73வது சுதந்திர தின விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ஷிவாணி வரவேற்று பேசினார். பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். மாணவிகள் மகாலெட்சுமி, ரோஜா, சண்முகப்பிரியா, மதுமிதா ஆகியோர் சுதந்திரம் பெற்றது மற்றும் பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாப்பது பற்றி பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவி சரபினா தொகுத்து வழங்கினார்.விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி செண்பகாதேவி நன்றி கூறினார்.

<< Go back to the previous page