News

News

தென்காசி குறுவட்ட கை எறிபந்து போட்டி : ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

தென்காசி குறுவட்ட கை எறிபந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். தென்காசி குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆய்க்குடி எபநேசர் கார்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான சூப்பர் சீனியர் பிரிவு எறிபந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கை எறிபந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி  ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.

<< Go back to the previous page