தென்காசி குறுவட்ட தடகளப் போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். தென்காசி குறுவட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்காசி குறுவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். சீனியர் பிரிவு மாணவர்களுக்கான 800 மீ, 1500 மீ, 3000 மீ ஓட்ட பந்தயங்களில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் பாரத் முதலிடம் பெற்றார். 4க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் பாரத், அன்சன்தாஸ், பாலா, உதயா ஆகியோர் முதலிடமும், 100 மீ மற்றும் 200 மீ ஓட்டத்தில் மாணவர் சிவப்பிரகாசம் இரண்டாமிடமும், 4க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் சிவப்பிரகாசம், வெங்கடேஸ்குமார், ராஜசெல்வம், இளவரசு ஆகியோர் இரண்டாமிடமும் பெற்றனர். 400 மீ ஓட்டத்தில் மாணவர் பாலா மூன்றாமிடமும், மும்முறை தாண்டுதலில் மாணவர் அழகுசூர்யா இரண்டாமிடமும், 3000 மீ ஓட்டத்தில் மாணவர் உதயா மூன்றாமிடமும், உயரம் தாண்டுதலில் மாணவர் வெங்கடேஸ்குமார் இரண்டாமிடமும், குண்டு எறிதலில் மாணவர் ஆகாஷ் இரண்டாமிடமும் பெற்றனர். ஜூனியர் பிரிவில் நீளம் தாண்டுதலில் மாணவர் இமத்வஜன் சுர்ஜித் இரண்டாமிடமும், குண்டு எறிதல் மற்றும் 60 மீ ஓட்டத்தில் மாணவர் மதீஸ் மூன்றாமிடமும், 4க்கு 100 தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் இமத்வஜன் சுர்ஜித், அஜிம் முஸ்தபா, அகஸ்டீன், மதிஸ் ஆகியோர் மூன்றாமிடமும் பெற்றனர்.சூப்பர் சீனியர் பிரிவில் 4க்கு 400 மீ தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் கார்த்திகேயன், பரணி, பிரகாஷ்ராஜ், சபரி பாலசுந்தர் ஆகியோர் முதலிடமும், 4க்கு 100 மீ தொடர் ஓட்டத்தில் மாணவர்கள் லியோன், முகமது கனி அனாஸ், ருத்ரேஷ் வசந்த், சிவசுப்பிரமணியன் ஆகியோர் முதலிடமும் பெற்றனர். 200 மீ ஓட்டத்தில் மாணவர் லியோன் முதலிடமும், மும்முறை தாண்டுதலில் இரண்டாமிடமும், உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும் பெற்றார். 800 மீ ஓட்டத்தில் மாணவர் கார்த்திகேயன் இரண்டாமிடமும், 1500 மீ ஓட்டத்தில் மாணவர் சபரி பாலசுந்தரர் இரண்டாமிடமும், 3000 ஓட்டத்தில் மாணவர் பிரகா~;ராஜ் இரண்டாமிடமும், மாணவர் பரணி மூன்றாமிடமும், நீளம் தாண்டுதலில் மாணவர் புவனேஷ்குமார் இரண்டாமிடமும் பெற்றனர். மாணவிகள் ஜூனியர் பிரிவில் உயரம் தாண்டுதலில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி சுவாதி இரண்டாமிடம், 200 மீ ஓட்டத்தில் மாணவி கஜஉதயா மூன்றாமிடமும் பெற்றனர். சீனியர் பிரிவில் 100 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் மாணவி அபிஷா முதலிடமும், உயரம் தாண்டுதலில் மாணவி சுபஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் பாரத் மாணவர்கள் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டமும், இப்பள்ளி மாணவி அபிஷா மாணவிகள் பிரிவில் தனிநபர் சாம்பியன் பட்டமும் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். சாம்பியன் பட்டம் மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமங்களின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வம், ராஜபாண்டி, இசக்கிதுரை, வெங்கடேஷ், பார்வதி, ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.