தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்டம் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி, அணு விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் பிறந்த தினம் உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் ஆதிசிவசாய்ராம் வரவேற்று பேசினார். டாக்டர் அப்துல்கலாமின் சாதனைகள் குறித்து மாணவ, மாணவிகள் பேசினர். டாக்டர் அப்துல்கலாம் வேடம் அணிந்து வந்த மாணவர்கள் விக்னேஷ்பாபு, புகழேந்தி, ராகவேந்திரா, மாணவி சக்தி துளசி ஆகியோர் அப்துல்கலாமின் நெறிமுறைகளை பற்றி பேசினர்.மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்துல்கலாம் பற்றிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மாணவி வந்தனா தொகுத்து வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மாணவி சவுமியாள் ஜெயக்கனி நன்றி கூறினார்.