மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார். நெல்லை மாவட்டம் பாளை., அண்ணா விளையாட்டு அரங்கில் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் லியோன் 48 முதல் 52 கிலோ எடை பிரிவில் முதலிடம் பெற்றார். இவர் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும் இப்பள்ளி மாணவர் லிமான் 41 முதல் 44 கிலோ எடைபிரிவிலும், மாணவர் ஹரீஸ் முத்துராம் 56 முதல் 60 கிலோ எடை பிரிவிலும், மாணவர் கிஷோர் ஸ்டாலின் 52 முதல் 56 கிலோ எடை பிரிவிலும், மாணவர் உதய இசக்கி 38 முதல் 41 கிலோ எடை பிரிவிலும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.