News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் குழந்தைகள் தின விழா

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமங்களைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவர்ஹலால் நேரு பிறந்த தினம் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎஸ்இ பள்ளி மாணவி தன்வந்தி நேரு வேடமணிந்து வந்து வரவேற்று பேசினார்.  இரு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியே விளையாட்டு போட்டிகள், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, மாறுவேடப் போட்டி, வினாடி-வினா போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நேரு வேடமணிந்து வந்த மாணவி தன்வந்தி, மாணவர் பிரித்திவ் வர்மா ஆகியோருக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை பரிசு வழங்கி பாராட்டி பேசினார். ஜவர்ஹலால் நேரு பற்றியும், அவரது பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடுவது பற்றியும் மாணவ, மாணவிகள் பேசினர். நேரு பற்றிய புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனை திரளான மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

<< Go back to the previous page