மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை சதக்அப்துல்லா அப்பா கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் கலந்து கொண்ட தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஹரீஸ் கார்த்திக், ஸ்ரீராம் ஆகியோர் சீனியர் பிரிவில் 78 கிலோவுக்கு மேல் உள்ள எடைப்பிரிவில் முதலிடமும், மாணவர் அபுபக்கர் சித்திக் 68 கிலோ முதல் 73 கிலோ வரை உள்ள எடைப்பிரிவில் முதலிடமும், சூப்பர் சீனியர் பிரிவில் மாணவர் லிமான் 52 கிலோ முதல் 55 கிலோ வரை உள்ள எடைப்பிரிவில் முதலிடமும், மாணவர் லியோன் 55 கிலோ முதல் 58 கிலோ எடைப் பிரிவில் முதலிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வன், ராஜபாண்டி, இசக்கித்துரை, வெங்கடேஷ், ராசம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்.