தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலைப் போட்டிகள் நடைபெற்றன. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலைப் போட்டிகள் நடைபெற்றன. 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை நடைபெற்ற இப்போட்டிகளில் திரளான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பாட்டுக்கு நடனம், ஏசோப், அமர் சித்ரா கதை கூறி நடிப்பு, சுற்றுச்சூழல் பேணுதல், பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட கதைக்கு ஏற்றவாறு நடிப்பு மற்றும் இசை போட்டி, அக்பர், பீர்பால் மற்றும் தெனாலிராமன் போன்று நகைச்சுவை திறன் போட்டி, சொற்றொடர் போட்டி, பாட்டு இயற்றும் போட்டி, தலைப்பு கொடுத்து கதை கூறும் போட்டி, செய்திதாள் வெட்டி நகல் எடுத்து ஒட்டும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் திரளான மாணவ, மாணவிகள் தனிநபராகவும், குழுவுடன் சேர்ந்தும் கலந்து கொண்ட இப்போட்டிகளில் 50க்கும் மேற்பட்டோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை, இயக்குநர் மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.