News

News

ஆக்ஸ்போர்டு பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5 மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் அரசு பொதுத் தேர்வினை சந்திக்க இருக்கின்றனர். இதனால் அம்மாணவ, மாணவிகள் அரசு தேர்வினை எதிர்கொள்ள ஆசிரியைகளின் பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்கு ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை தலைமை தாங்கினார். ஆசிரியை பிளிசி வரவேற்று பேசினார். பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தார். முகாமில் தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள் ஆகியோர் மாணவர்களின் திறனை மேம்படுத்த ஆசிரியைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர். ஆசிரியைகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியை ஜான் டயனா நன்றி கூறினார்.

<< Go back to the previous page