தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளி முதல்வர் திருமலை தலைமை வகித்தார். தாளாளர் அன்பரசி திருமலை, நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ரேணுகா வரவேற்றுப் பேசினார். ஆசிரியர் ஜீவரத்தினம் இறை வணக்கம் பாடினார். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. சரண்யா வரவேற்பு நடனம் ஆடினார். தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், ஆசிரியைகள் ராணி, முருகேஸ்வரி, சித்ரா, வனிதா ஆகியோர் ஆசிரியர் தின உரையாற்றினர். ஆசிரியைகள் பங்கேற்ற நாடகம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி, துணுக்குகள் கூறுதல், சிரிப்போ சிரிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை ஆசிரியைகள் சௌமியா, பாலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் ஆசிரியை பேபி நன்றி கூறினார்.