News

News

ஆக்ஸ்போர்டு பள்ளிக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கிய அமைச்சர்

நெல்லை: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு தொடர் அங்கீகார ஆணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நெல்லை சங்கர்நகர் ஜெயேந்திரா சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. 

விழாவிற்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார். மெட்ரிக் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர் கோபிதாஸ் வரவேற்றுப் பேசினார்.செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

விழாவில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கி பேசினார். 

இவ்விழாவில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கான தொடர் அங்கீகார ஆணையை அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்து பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை பெற்றுக் கொண்டார்.
 
இவ்விழாவில் தென்காசி எம்.எல்.ஏ.வும், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, எம்எல்ஏ.,க்கள் முருகையா பாண்டியன், இன்பத்துரை, சண்முகநாதன், ரெட்டியார்பட்டி நாராயணன், தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கருப்புசாமி, தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

<< Go back to the previous page