தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது .
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி 19ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படலாம் என அரசு கூறியுள்ளது.
தென்காசி குத்துக்கல்வலசை
ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளை வரவேற்கும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது .
வகுப்பறையில் 25 மாணவ, மாணவிகள் மட்டும் அமரக்கூடிய வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டது. காலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது. மேலும் பெற்றோர்களின் இசைவு கடிதம் பெறப்பட்டது . மாணவ, மாணவிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது .
முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பள்ளி வந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. விதிமுறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஒட்டப்பட்டிருந்தன.
வரவேற்பு நிகழ்ச்சியில் ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, இயக்குநர்
வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால் சுசி, தலைமை ஆசிரியை குழந்தை தெரசா உதவி தலைமையாசிரியை க. சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் கலந்து கொண்டனர்.